Ads 468x60px

Monday, September 30, 2013

டிசம்பர் 12 – ரஜினி பிறந்த நாளில் கோச்சடையான் ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்திய சினிமா உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கோச்சடையான் அவரது பிறந்த நாளான டிசம்பர் 12ந் தேதி வெளியாகிறது. இதனை கோச்சாடையான் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சினிமாவின் நவீன தொழில்நுட்மான மோசன் கேப்டசரில் உருவான முதல் ஹாலிவுட் படம் அவதார். உலக சினிமா வரலாற்றில் அதிக வசூலை குவித்த படம். அதே தொழில்நுட்பத்தில் 140 கோடி ரூபாய் செலவில் உருவாகி உள்ளது கோச்சடையான்.
ரஜினியின் மகள் சவுந்தர்யா இயக்கி உள்ளார். அவருக்கு கே.எஸ்.ரவிகுமாரும், மாதேசும் இயக்கத்தில் உதவி இருக்கிறார்கள். தீபிகா படுகோனே, ஜாக்கி ஷெராப், சரத்குமார், ஷோபனா, ருக்மணி, ஆதி, நாசர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார்.
தற்போது படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு ரெடியாகி விட்டது. உலகம் முழுவதும் 3 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிட இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் மட்டும் ஆயிரம் தியேட்டர்கள், சமீபத்தில் வெளியிடப்பட்ட டிரைய்லரை 3.5 மில்லியன் ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள்.
அடுத்த மாதம் ஒரு பாடலும், தீபாவளியையொட்டி அனைத்த பாடல்களையும் வெளியிட இருக்கிறார்கள். ரஜினி பிறந்த தினமான டிசம்பர் 12ந் தேதி வியாழக்கிழமை படம் ரிலீசாகிறது.

0 comments:

Post a Comment